LATEST NEWS
“எனக்கு 40 வயசு ஆச்சு, இனிமே இதெல்லாம் செட் ஆகாது”… ரசிகர்களுக்கு திடீரென ஷாக் கொடுத்த நடிகர் தனுஷ்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் இவருடைய நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பரத் பாலா, தனுஷ், ஏ ஆர் ரகுமான் மற்றும் பார்வதி ஆகியோர் வீடியோ கார்டில் பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இயக்குனர் பரத் பாலா தனுஷின் நீங்கள் காதல் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் அதனை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ்,சிரித்துக் கொண்டே எனக்கு தற்போது 40 வயதாகி விட்டதுஇனிமேல் காதல் படம் எல்லாம் எனக்கு செட் ஆகாது எனவும் அதனை அடுத்த தலைமுறை நடிகர்கள் பன்னட்டும் என்றும் கூறியுள்ளார்.
