‘பாகுபலி’ பல்வாள்தேவனின் மனைவியை பாத்துருக்கீங்களா?… அடடே இவரா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே… - cinefeeds
Connect with us

LATEST NEWS

 ‘பாகுபலி’ பல்வாள்தேவனின் மனைவியை பாத்துருக்கீங்களா?…  அடடே இவரா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

Published

on

2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த லீடர் படத்தின் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து மடை திறந்து, காடன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ராணா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ராணாவின் மனைவி மிஹீகா. இவர் தற்பொழுது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in