LATEST NEWS
‘இந்த இடத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது’… பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட எமோஷனல் பதிவு…

தமிழ் சின்னத்திரையில் 90களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலான சித்தி சீரியலில் ஒரு கல்லூரி பெண்ணாக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் தேவி பிரியா. அதனைத் தொடர்ந்து பல சீரியல் வில்லியாக நடித்த இல்லத்தரசிகள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீரியல்களில் நடிப்பதோடு தன்னுடைய திறமையை நிறுத்திக் கொள்ளாமல் தேவி பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே என்ற சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை தேவிப்பிரியா. அவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவர் கண்ணே கலைமானே சீரியலுக்காக தான் படித்த பள்ளியின் முன் ஷூட்டிங் செய்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.