VIDEOS
அட நம்ம கயல் ஆனந்தி இது?… மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமான அனைத்து நடிகைகளுமே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பது சிரமம் தான். ஆனால் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.
இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சண்டிவீரன் மற்றும் மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கயல் ஆனந்தி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ சூட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க