VIDEOS
அடேய் உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?… ஜவான் படம் பார்க்க முகத்தில் கட்டுடன் வந்த ரசிகர்கள்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் திரைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் சாருக்கான் நடிப்பில் வெளியான படம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூல் செய்தது. அதனால் ஜவான் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. பின்னர் முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்த ஜவான் மொத்தம் 130 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டே நாட்களில் 240 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. ஜவான் திரைப்படம் 4 நாளில் 520 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜவான் வெற்றியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் அனைவரும் திரையரங்கில் சென்று படம் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஜவான் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் படத்தில் ஷாருக்கான் முகத்தில் கட்டுடன் வரும் கெட்டபில் சென்று தியேட்டரில் படம் பார்த்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
This Craze Defines The Greatness Of #Jawan.
This is Revaluation Of Indian Cinema.
Agree or Die…🤕🤕🤕#ShahRukhKhan #JawanBlockBuster #JawanBoxOffice #Jawan2 #VikramRathore #JawanInCinemasNow pic.twitter.com/ThrPFhg0dR— Aju Bhai (SRK Riyadh Fan Account) (@Ajukhan111) September 11, 2023