தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் பல செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊருக்கு சென்று கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து திருமணத்திற்காக அவர் சொந்த ஊர் சென்றார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.
அதே சமயம் சிறுவயதில் இருந்து கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.
இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அவ்வகையில் தாய்லாந்து சென்று இருந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

