LATEST NEWS
நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நடிகை வித்யுலேகா 1991 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பிறந்தார்.
இவர் பிரபல நடிகர் மோகன் ராமன் மகள்.தனது பள்ளிப்படிப்பை வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் பயின்றார்.
பின்னர் MCTM மெட்ரிகுலேஷன் சென்றார் அங்கு அவர் நாடகம் மற்றும் நடிப்பில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
எம்.ஓ.பி.யில் தனது கல்லூரிப் பருவத்தில் மேடைத் தயாரிப்புகள் செய்து புகழ் பெற்றார். வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார்.7 வருடங்களுக்கும் மேலாக நாடக அனுபவம் பெற்றவர்.
ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
இவர் தமிழில் ஜில்லா, வீரம், வேதாளம் ,காக்கி சட்டை, மாப்பிள்ளை ,உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கிலும் காமெடி நடிகையாக பிசியாக நடித்து வந்தார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ல் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.
நடிகை வித்யுலேகா ராமன் என்பவரை காதலித்து 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் வந்து கலந்து கொண்டனர். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
