LATEST NEWS
இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமணியிடம் இணை இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக புது அவதாரம் எடுத்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார்.இவர் இயக்கி சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன் போன்ற படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தது.
1994 ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டாமை’ திரைப்படம் இன்று முதல் மக்கள் மத்தியில் ரசிக்கப்படும் படமாக உள்ளது.இப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழக மாநில விருதையும், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ‘படையப்பா’ படத்தை இயக்கினார். இப்படமானது சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது.இப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதை பெற்றார்.
நடிகர் சரத்குமாரை மட்டும் வைத்து சுமார் 12 படங்கள் இயக்கியுள்ளார்.இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடித்த ‘லிங்கா’ திரைபடத்தை இயக்கினார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இவர் தெலுங்கிலும் பல படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில்கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ,நடிப்பில் வெளியான படம் ‘கூகுள் குட்டப்பா’ இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
பிரபல முன்னணி நடிகர்கள் சரத்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், அர்ஜூன், விஜய் ,சூர்யா, மாதவன், சிலம்பரசன் ஆகியோர் இவர் இயக்கிய படத்தில் நடித்துள்ளனர்.இவர் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தற்போது இவரின் பலரும் பார்த்திடாத புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

