தமிழ் திரைப்படங்களில் IMDb மதிப்பில் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்கள் என்னன்னு தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் திரைப்படங்களில் IMDb மதிப்பில் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்கள் என்னன்னு தெரியுமா?..

Published

on

தமிழ் சினிமாவில் திரையிடப்படும்  அனைத்து படங்களும்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு    பெருவதில்லை. அப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு  பெற்ற படங்களின்IMDB மதிப்பை  பற்றி  இதில் காண்போம்.

1.நாயகன்:

Advertisement

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘நாயகன்’. இப்படமானது உள்ளூர் மாஃபியா மற்றும் கும்பல் சண்டைகளுக்கு எதிராக மும்பையில் தனது மக்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தமிழன் பற்றிய கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.6/10  பெற்றுள்ளது.

2. அன்பே சிவம்:

Advertisement

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பே சிவம்’ இப்படமானதுதிமிர் பிடித்த இளைஞர் மற்றும் மற்றொருவர் உடல் ஊனமுற்றவர் விமானத்தில் சந்தித்து வாழ்க்கை, உறவுகள் மற்றும் மனிதநேயம் போன்றதை பற்றிய கதையாகும்.இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.5/10 பெற்றுள்ளது.

3.பரியேறும் பெருமாள்:

Advertisement

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’ இப்படமானது கல்லூரி மற்றும் கிராமத்தில் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன், கிராமத்தில் பணக்கார சாதி மக்களால் அவமதிக்கப்படுவதைப் பற்றிய கதையாகும்.இப்படத்திற்கு IMDb  மதிப்பு  8.5/10 பெற்றுள்ளது.

4. ஜெய் பீம்:

Advertisement

டி ஜோ ஞானவேல் இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படமானது ஒரு இந்திய வழக்கறிஞர் வாழ்க்கை வரலாறு ஆகும். சந்துரு அவர்கள் தமிழகத்தின் பழங்குடியினர் மற்றும் ஏழை மக்கள் மீது பொய் வழக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகளை எடுத்தார். அதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.8/10  பெற்றுள்ளது.

5. சூரரைப் போற்று:

Advertisement

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. இப்படமானது குறைந்த விலையில் விமான சேவைகளை கனவு காணும் நெடுமாறன் பல தடைகளை எதிர்கொள்ளும் ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி மாறாவின் கதையாகும் இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.7/10  பெற்றுள்ளது.

 

Advertisement

6. தேவர் மகன்:

இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தேவர் மகன்’. இப்படமானது லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்குத் தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார். அவர்களது குடும்பத்தினருக்கும் இடையிலான போராட்டங்களை கதையாக  கொண்டுள்ளது. இப்படத்திற்கு  IMDb மதிப்பு 8.7/10  பெற்றுள்ளது.

Advertisement

7. கைதி:

இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம்’ கைதி’ இப்படத்தில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வரும் கைதியை சுற்றி தற்செயலாக நடக்கும் கதையை கொண்டது. இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.4/10 பெற்றுள்ளது.

Advertisement

8. 96 :

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ’96 ‘இப்படத்தில் விஜய் சேதுபதி & த்ரிஷா நடித்துள்ளனர்.  தன் பள்ளி நாட்களில் ஒரு பெண்ணை காதலித்து  காரணங்களால் அவளை இழக்கும் ஒரு உள்முக சிந்தனையுள்ள பையனின் கதை, பள்ளித் தோழர்கள் ஏற்பாடு செய்த மறு சந்திப்பில் அவர்கள் இருவரும்  சந்தித்து அவளுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.இப்படத்தின் IMDb  மதிப்பு 8.5/10 பெற்றுள்ளது.

Advertisement

9.விசாரணை:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’ இப்படமானது சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இப்படத்திற்கு IMDb  மதிப்பு  8.4/10 பெற்றுள்ளது.

Advertisement

10. அசுரன்:

இயக்குனர்  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘அசுரன்’ இப்படமானது கிராமத்து நில உரிமையாளரை கொலை செய்யும் அப்பாவி விவசாயின் கதையாகும். இப்படத்திற்கு IMDb  மதிப்பு 8.4/10 பெற்றுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in