LATEST NEWS
கோடிகளைக் கொட்டிய அமைச்சர்கள்… தேர்தல் ஆணைய அறிக்கையால் அம்பலமான தவெக-வின் பலம்… திராவிடக் கட்சிகளின் கணக்கை உடைத்த புதிய வரவு..!!
தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2025–2026 நிதியாண்டில் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அக்கட்சி மொத்தம் ₹13.30 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள FORM 24A ஆவணத்தின் மூலம் இந்த நிதி விவரங்கள் பொதுவெளியில் வெளியாகி அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிதிப் பங்களிப்பில் தவெகவின் முக்கியப் பிரமுகர்களான அமைச்சர்களே முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக, தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா தனது சொந்த நிதியிலிருந்து அதிகபட்சமாக ₹8.20 கோடியை RTGS முறையில் கட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு முக்கியப் பிரமுகரும் தற்போதைய வனத்துறை அமைச்சருமான ரஞ்சித் குமார் ₹5 கோடி நிதியை தவெகவிற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதே 2025-2026 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களும் இந்த அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன. அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மொத்தம் ₹191 கோடியையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ₹161 கோடியையும் இந்த நிதியாண்டில் நன்கொடையாகப் பெற்றுள்ளன. பிரதானக் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நிதி திரட்டியுள்ள சூழலில், புதிய கட்சியான தவெகவின் நிதி ஆதாரம் அதன் முக்கியப் பொறுப்பாளர்களிடமிருந்தே வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது
