LATEST NEWS
BREAKING: துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் உடல் நசுங்கி பலி, 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்… காலையிலேயே சோகமான செய்தி.!!
மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள சூர்யபாகன் துர்கா பூஜை பந்தலில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சப்தமி திருவிழா கொண்டாட்டங்களின் போது திடீரென பெய்த பலத்த மழையினால், வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பந்தலுக்குள் நுழைய முற்பட்டபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இச்சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்து நேரில் ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “கொல்கத்தா துர்கா பூஜை பந்தல் நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த மனவேதனை அளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலியைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
