LATEST NEWS
தளபதிக்காக வெறித்தனமான கதைக்களத்துடன்… 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மோகன் ராஜா – விஜய் கூட்டணி.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே வேலாயுதம் திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய் கூட்டணி அமைந்த நிலையில் இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவர்கள் மீண்டும் கூட்டணி இணையவில்லை.
இருந்தாலும் ரசிகர்கள் இருவரும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கான முயற்சியும் பலமுறை நடந்துள்ளது. ஒருமுறை விஜய்யை சந்தித்த இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க திரில்லர் கலந்த கதை ஒன்றை மோகன் ராஜா கூறியுள்ளார். அப்போதுதான் அருண் விஜயின் தடம் திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்தத் திரைப்படத்தின் கதையும் விஜய்க்காக மோகன் ராஜா கூறிய கதையும் ஒரே சாயலில் இருந்ததால் மோகன் ராஜா விஜய்க்கு கூறிய கதையை எடுக்க முடியாமல் போனது.
ஆனால் தற்போது அந்த கதையை அப்படியே வேற லெவலில் மோகன் ராஜா மாற்றி அமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு சூப்பர் கதைகளை கூட விஜய்க்காக தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனவே இந்த கூட்டணி விரைவில் அமையும் என எதிர்பார்ப்பதாக மோகன் ராஜா கூறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.