LATEST NEWS
அழகான டாப்-10 தொகுப்பாளினிகள் யார் யார்.. தெரியுமா? அவர்களின் நிலை என்ன… விவரம் உள்ளே..!
முன்பு காலகட்டங்களில் வெள்ளி திரை என்றால் ஒரு மார்க்கெட் சின்னத்திரை என்றால் ஒரு மார்க்கெட் என்று வகுத்திருக்கும் சமீபகாலங்களாக அதனை மாற்றி வருகிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள் .அதிலும் முக்கியமானது என்ன வென்றால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் தொப்பளார்களின் பங்கே மிக முக்கியமானது.
அந்தவகையில் தமிழில் டாப் – 10 தொகுப்பாளர்கள் யார் யார் என்று பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தான் எப்பவும் மக்களின் விருப்பமாக உள்ளது.
திவ்யதர்ஷினி
இவர் விஜய் டிவி-யின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது.
பிரியங்கா
இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர். தற்போது விஜய் டிவியின் நாடி துடிப்பாக உள்ளார். இவரை ரசிகர்கள் கலாய்ப்பதே இவரின் பிளஸ் பாய்ன்டகா உள்ளது.
அஞ்சனா
இவர் முதலில் சான் மியூசிக் சேனலில் Vj-வாக பணியாற்றி வந்தார். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார். இப்போ திருமணத்திற்கு பிறகு ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.
அர்ச்சனா
இவர் காமெடி டைம் என்று நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாவர். அதன் பின்னர் சான் டிவி , விஜய் டிவி ,ஜீ – தமிழ் என கடந்த 15 வருடங்களை ஆங்கரிங் பணி செய்துவருகிறார்.
ரம்யா
இவர் விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர். தற்போது சினிமா நிகழ்ச்சி ,மற்றும் பாடல் வெளியிட்டு விழா என படும் பிசியாக உள்ளார்.
கீர்த்தி
இவர் கலைஞர் டிவி ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் பணி புரிந்து வருகிறார். சொந்தமாக ஒரு நடன பள்ளி வைத்துள்ளார்.
மணிமேகலை
இவர் சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வழங்கி வந்தார். தற்போது விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் நடன இயக்குனரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பாவனா
இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிரிக்கெட் கமெண்ட்டராக மாறியுள்ளார்.
நட்சத்திரா
இவர் சன் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார். தற்போது சீரியல் , நடனம் மற்றும் சினிமாவில் நடித்துவருகிறார்.
