CINEMA
விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா…விமர்சனத்தில் ‘நூறு சாமி’… வசூலில் ‘எங்கள் தங்கம்’…தமிழ்நாட்டில் விஜய் ஆண்டனி மாஸ்… உலகளவில் சமந்தா கொடுத்த ஷாக்…பாக்ஸ் ஆபீஸ் வின்னர் யார்?…
தமிழ் சினிமாவில் இந்த வாரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ மற்றும் சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று திரையரங்குகளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின. ‘பிச்சைக்காரன்’ போன்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய சசி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளதால் ‘நூறு சாமி’ படத்திற்கு தமிழகத்தில் பலத்த ஹைப் இருந்தது. இதற்குப் போட்டியாக, சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவான ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பான ‘எங்கள் தங்கம்’ திரைப்படமும் நேற்று வெளியாகி பாக்ஸ் ஆபீசில் நேருக்கு நேர் மோதின.
இதில் விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா நடிப்பில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதல் நாள் வசூலில் இப்படம் இந்திய அளவில் சுமார் 85 லட்சம் ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 75 லட்சம் ரூபாய் வசூலாகக் கிடைத்துள்ளது. உலகளவில் இப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், தியேட்டர்களில் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாலும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று தியேட்டர் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
மறுபுறம், சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் சுமாரான வரவேற்பைப் பெற்று, முதல் நாளில் 38 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இது ‘நூறு சாமி’ படத்தின் தமிழக வசூலில் பாதியாகும். ஆனால், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் சமந்தாவின் படம் மாஸ் காட்டியுள்ளது. உலகளவில் முதல் நாளில் மட்டும் இப்படம் 10.70 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்துள்ளது. இதில் குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் 4.75 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 4.50 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 90 லட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழக பாக்ஸ் ஆபீஸில் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ முதலிடம் பிடித்திருந்தாலும், உலகளாவிய வசூலில் சமந்தாவின் படம் 10 மடங்கு அதிகமாக ஈட்டி அசுர சாதனை படைத்துள்ளதோடு, அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு மிகச்சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது.
