CINEMA
இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னது இல்லே, ஆனா நூறு சாமி படம் என்னை பற்றி அப்படி சொல்ல வெச்சிருக்கு – வெளிப்படையாக சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி, அவருக்கு இப்படி ஒரு ஆதங்கமா?
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் வேட்டைக்காரன் நான் அவன் இல்லை என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பிறகு நான் என்ற படம் மூலம் நடிகராகி அறிமுகமாகி 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அவர் நடித்த 25வது படம் சக்தி திருமகன். அதன்பிறகு இப்போது இயக்குனர் சசி இயக்கத்தில் நூறு சாமி என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ஃபீல் குட் படங்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்து வரும் நிலையில் அந்த வரிசையில் நூறு சாமி படமும் இணைந்து உள்ளது. இந்த படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலும் கதையையே பாராட்டினார்கள். முதல் முறையாக எனது நடிப்பை பாராட்டிய படம் நூறு சாமி படம்தான் என்று விஜய் ஆண்டனி பெருமையாக கூறியிருக்கிறார்.
