VIDEOS
ஹிந்தியில் பேசி அசத்திய நயன்தாரா…. வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் , இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் டப் ஆகி டிசம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை விளம்பரப்படுத்தும் விதமாக நயன்தாரா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் ஹிந்தியில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
