தல அஜித்தை பார்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்ட பயில்வான்… சரியான பதிலடி கொடுத்து வாயடைக்க செய்த அஜித்… வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

தல அஜித்தை பார்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்ட பயில்வான்… சரியான பதிலடி கொடுத்து வாயடைக்க செய்த அஜித்… வைரலாகும் வீடியோ…

Published

on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பில்லா. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பயில்வான் ரங்கநாதன் நடிகர் அஜித்தை பார்த்து  வில்லங்கமான கேள்விகளை கேட்டுள்ளார். அதாவது, நீங்கள் ஏன் முன்பு மாறி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இல்லை என பயில்வான் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அஜித் என்னை பற்றி உங்களுக்கே தெரியும், உங்களுடன் நிறைய படங்கள் நான் நடித்துள்ளேன்.

நான் தனிமையை விரும்புபவன். ஒரு படத்திற்கு கண்டிப்பாக பப்ளிசிட்டி தேவை. ஆனால் அதைத் தாண்டியும் அவருக்கு ஒரு வாழ்க்கை உண்டு. நான் நிறைய பிளாப் படங்கள் கொடுத்துள்ளேன். என்ன போல வேற யாரும் இருந்தா இந்நேரம் சினிமாலேயே இருந்திருக்க முடியாது. ஆனால் நான் இப்பவும் நடிக்கிறதுக்கு காரணம் ரசிகர்கள் மட்டும் தான்.

மேலும், நான் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் வயது உள்ள போதே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அஜித் பயல்வானுக்கு சரியான பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது பல சினிமா பிரபலங்களும் பயில்வான் பேச்சை தடுக்க முடியாத நிலையில் அப்போதே அஜித் தனது பதிலால் பயில்வானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ…