அடேங்கப்பா!… இத்தனை பைக்கா?… விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?… இணையத்தில் வைரலாகும் நடிகர் மாதவனின் சூப்பர் bike collections… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா!… இத்தனை பைக்கா?… விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?… இணையத்தில் வைரலாகும் நடிகர் மாதவனின் சூப்பர் bike collections…  

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் தமிழ் மட்டும் இந்த ஹிந்தி சினிமாவிலும் தற்பொழுது பாப்புலர் ஆக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ராக்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் மாதவன் தற்போது நயன்தாரா, சித்தார்த் போன்றோருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

தற்பொழுது இத்திரைப்படத்தை எதிர்பார்த்து தற்போது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இவருடைய மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் பல்வேறு விருதுகளை வாங்கியும் குவித்து வருகிறார். ‘அலைபாயுதே’ திரைப்படத்தில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, நடிகர் மாதவன் ஸ்டைலாக வரும் காட்சியை நாம் அனைவரும் ரசித்திருப்போம்.

Advertisement

திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர் மாதவன்.மாதவன் தன்னுடைய கேரேஜில் பல்வேறு சூப்பர் பைக் மாடல்களை வைத்திருக்கிறார். தன்னுடைய சூப்பர் பைக்குகளை அவர் ஓட்டும் காணொளி ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு அபார்ட்மெண்டின் பார்க்கிங் ஏரியாவில் தன்னுடைய சூப்பர் பைக்குகளை ஒவ்வொன்றாக ஓட்டிய படியே வலம் வருகிறார் மேடி. இந்த வீடியோவை தற்போது பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் முதலில் ‘யமஹா V மேக்ஸ்’ க்ரூஸர் பைக்கை ஓட்டி வருகிறார் மாதவன். 200hp பவரை வெளிப்படுத்தும் 1679சிசி V4 லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்ட இந்த பைக்கானது, ரூ.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டது.

Advertisement

இரண்டாவதாக, ரூ.40 லட்சம் மதிப்புடைய இந்தியன் ரோட்ஸ்டர் மாடல் க்ரூஸர் பைக்கை இயக்குகிறார் மாதவன். இந்த பைக்கில் 1181சிசி தண்டர்ஸ்ட்ரோக் 111, V-ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இதனைத் தவிர்த்து ரூ.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட ‘டுகாட்டி டியாவெல்’, ‘ட்ரையம்ப் ராக்கெட் 3’ மற்றும் ரூ.33 லட்சம் மதிப்புடைய ‘பிஎம்டபிள்யூ K1600 GTL’ ஆகிய சூப்பர்பைக்குகளையும் தன்னுடைய கேரேஜில் வைத்திருக்கிறார் மாதவன். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aravind Kamalanathan (@dop.aravind)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in