யார் அது..? தொடர்ந்து ஒலித்த செல்போன் ரிங்… அருகில் சென்று பார்த்த பெண்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வயல்வெளியில் கிடந்த மர்ம சடலம்..! நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யார் அது..? தொடர்ந்து ஒலித்த செல்போன் ரிங்… அருகில் சென்று பார்த்த பெண்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வயல்வெளியில் கிடந்த மர்ம சடலம்..! நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள மல்காபூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன அந்த இளைஞரின் வயது சுமார் 25 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த வயல்வெளியில் இருந்து தொடர்ந்து ஒலித்த தொலைபேசியின் ரிங் சத்தத்தைக் கேட்டுச் சென்ற சில பெண்களுக்கு அங்கு இளைஞரின் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மௌகஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மல்காபூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் திவாகர் கிரி என்பவரின் விவசாய நிலத்தில் நடந்துள்ளது. உள்ளூர்வாசி சஞ்சய் கோல் என்பவரின் வீட்டை சேர்ந்த பெண்கள் பாத்திரம் கழுவுவதற்காக வெளியே வந்தபோது, ​​வயல்வெளிப் பகுதியிலிருந்து மொபைல் போன் மணி ஒடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்று பார்த்த பெண்களுக்கு அங்கே இளைஞரின் சடலம் கிடப்பது தெரியவந்தது. திடீரென சடலத்தைக் கண்ட அவர்கள் பீதியடைந்து கிராம மக்களுக்குத் தகவல் கொடுக்கவே, விரைவிலேயே அங்கு ஏராளமானோர் கூடினர்.

Advertisement

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மௌகஞ்ச் காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். கொல்லப்பட்ட அல்லது இறந்த இளைஞர் யார், அவர் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரா அல்லது வேறு எங்குமிருந்த வந்தவரா என்பதை அடையாளம் காண்பதே தற்போது காவல்துறையினருக்குப் பெரிய சவாலாக உள்ளது. இந்த மரணம் இயற்கையானதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியாகத் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in