LATEST NEWS
ஆட்டம் க்ளோஸ்..! விஜய்யின் கையில் அந்த லிஸ்ட்..! ரகசியங்களை கசியவிட்ட புள்ளி யார்…? பீதியில் முன்னாள் அமைச்சர்கள்..!!
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள்ளேயே, முந்தைய ஆட்சிக் காலங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத் தொடர் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கைகளின் பின்னணியில் முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு “ரகசியப் பட்டியல்” இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பட்டியலில் முறைகேடுகளில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் விவரங்கள் அடங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் திரைமறைவில் ரகசியமாக நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தங்களுக்குள்ளேயே இருந்த ஒரு “ஸ்லீப்பர் செல்” மூலம் முக்கிய ஆவணங்களும் தகவல்களும் புதிய அரசிடம் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சட்ட ரீதியான நெருக்கடிகள் வரலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த அடுத்தடுத்த திருப்பங்கள் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
