சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை வைஷ்ணவி.
இவர் சீரியலில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். வைஷ்ணவி சமீபத்தில் அவரின் பிறந்த நாளை தனியார் ரிசார்ட் ஒன்றில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் தனது காதலரை அனைவருக்கும் அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.