தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் வினித். இவர் 1992 ஆம் ஆண்டு ஆவாரம் பூ என்ற திரைப்படத்தில் சர்க்கரை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பை சினிமாவில் அறிமுகமானார்.
இவர் சிறுவயதிலிருந்து பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டு வளர்ந்தார்.
கேரளாவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமடி விருதை வென்றார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இவர் பரதநாட்டியம் அருமையாக ஆடி இருப்பார்.
1984 ஆம் ஆண்டு இடநிலங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு ஆவாரம் பூ என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றார்.
அதன் பிறகு ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம் மற்றும் காதல் தேசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அது மட்டும் அல்லாமல் காதல் கிறுக்கன்,பிரியமான தோழி மற்றும் சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்தார்.
சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் பணியாற்றியுள்ளார்.
இறுதியாக கம்போஜி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெண் குழந்தை தற்போது உள்ளது. இவருக்கு தற்போது 17 வயதாகிறது.
தற்போது வினித் நல்ல கதையை கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது வினித்தின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.