தவெக-வில் அதிரடி ஆக்ஷன் பிளான்…! மாற்றுக்கட்சி MLA-க்களுக்கு சீட் இல்லை..? – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக-வில் அதிரடி ஆக்ஷன் பிளான்…! மாற்றுக்கட்சி MLA-க்களுக்கு சீட் இல்லை..? – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு பின்னணி..!!

Published

on

இனி வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைமை விரும்பவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித் தாவிய நபர்களுக்கு மீண்டும் தேர்தல் சீட் வழங்கினால் அது மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர். இதனால், வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் புதிய மற்றும் தூய்மையான முகங்களை நிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்காகத் தேர்தல் களத்தில் நேரிடையாக நின்று பிரச்சாரம் செய்வதில் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.எம். விஜய்க்கு கூடுதல் அரசியல் நெருக்கடி இருப்பதாகக் கருதப்படுகிறது. கொள்கை ரீதியாகத் தவெகவை எதிர்க்கும் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்காக வாக்கு சேகரிப்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் கருதுகிறாராம். இதன் காரணமாகவே, கட்சித் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ-க்களைத் தேர்தல் களத்தில் இருந்து தள்ளி வைக்கத் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தியடையும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்தத் தவெகவின் முக்கிய அமைச்சர்கள் தற்பொழுது களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குத் தேர்தல் வாய்ப்பிற்குப் பதிலாக அரசு வாரியத் தலைவர் (Board Chairman) பதவிகளை வழங்கிக் கட்சிக்குள் அமைதியாக வைத்திருக்க தவெகவின் மூத்த அமைச்சர்களான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அந்த நிர்வாகிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விபரமறிந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in