அட்ஜஸ்ட்மெண்ட்…..! நானும் இது போன்ற நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்….. ஓபனாக பேசிய பிரபல நடிகை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்ஜஸ்ட்மெண்ட்…..! நானும் இது போன்ற நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்….. ஓபனாக பேசிய பிரபல நடிகை….!!!!

Published

on

சினிமாவை பொறுத்தவரையில் எங்கு பார்த்தாலும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டுள்ளது. எந்த நடிகையிடம் கேட்டாலும் அவர்களும் இதையெல்லாம் தாண்டி தான் வந்துள்ளனர் என்று பதில் கூறி வருகிறார்கள். பலரும் சினிமாவில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை தாரணி, பல படங்களில் கவுண்டமணி, வடிவேல், விவேக் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த அசதி இருப்பார். திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

Advertisement

அதில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அது பற்றிய அவர் நானும் இது சம்பந்தமான நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன் என்றும், என்னிடம் கேட்கும் இயக்குனர்களிடம் நான் தெளிவாக கூறிவிடுவேன், என்னை பற்றி யாரோ தவறாக கூறியுள்ளார்கள். அப்படியெல்லாம் என்னால் செய்ய முடியாது என்று கூறிவிடுவேன். அதையும் மீறி விரும்பும் இயக்குனர்கள் கோபத்தில் என் முதுகில் லைட்டை தூக்கி எரிந்துள்ளார்கள். அந்த எரிச்சல் புண்ணாக கூட மாறி உள்ளது. இதை கடக்காமல் சினிமாவில் யாரும் வர முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in