LATEST NEWS
முதல்முறையாக சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தோனி… அதுவும் ரோலக்ஸ் சூர்யா போல… செம குஷியில் ரசிகர்கள்..!!

இந்தியாவின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரின் மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் லேட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க இவானா, நதியா, யோகி பாபு மற்றும் டிடிவி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் விட்னஸ், தெலுங்கில் அஹம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி என்ற திரைப்படத்தை இயக்கி இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட நிலையில் ரமேஷ் திருமேனி இயக்க உள்ளார். இந்த திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை 28ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் LGM படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தத் திரைப்படத்தில் தோனி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த படத்தில் தோனி நடித்திருந்தால் இதுதான் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் ஆக இருக்கும்.
இதற்கு முன்னதாக தோனி ஏராளமான விளம்பரங்களில் நடித்திருந்தாலும் இதில் ரோலக்ஸ் மாதிரி செம மாசான கெஸ்ட் ரோலில் தோனி நடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.