LATEST NEWS
மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி….. மகிழவைத்த டைரக்டர் லோகேஷ் தற்கொலை….!!!!
சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1990களில் தொலைக்காட்சியில் மர்மதேசம், ஜீபூபா, போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் லோகேஷ். இந்த மர்மதேச தொடருக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. சன் டிவி மற்றும் ராஜ் டிவிகளில் பல சேனல்களில் இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்து தொடரில் குட்டி ராசுவாக நடித்த லோகேஷ் பார்த்து பலரும் வியந்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார்.
மர்ம தேச தொடரை விடவும் ஜீபூம்பா சீரியல் லோகேஷ்க்கு மிகப்பெரிய புகழை தந்தது. நடிப்பதை விட்டுவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்திய லோகேஷ் ஒரு சில குறும்படங்களை இயக்கி வந்தார். வெள்ளித்திரையில் படங்களை இயக்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த இவர் திடீரென்று நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதனால் பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
