அந்த நடிகையுடன் தொடர்பு…..! தினமும் அடி உதை…. 3 மாத கர்ப்பத்துடன் கதறும் பிரபல சீரியல் நடிகை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த நடிகையுடன் தொடர்பு…..! தினமும் அடி உதை…. 3 மாத கர்ப்பத்துடன் கதறும் பிரபல சீரியல் நடிகை….!!!!

Published

on

தனது கணவர் தன்னை அடித்து உதைத்ததால் எனது கரு கலையும் நிலைமையில் உள்ளது என்று செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த சீரியல் கேளடி கண்மணி. இந்த சீரியலில் நடித்த நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா நட்பாக பழகி வந்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அர்னவ் முஸ்லிம் என்பதால் முதலில் முஸ்லிம் முறைப்படி திருமணமும், அதன் பிறகு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் அர்னவ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Advertisement

 

அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் திவ்யா ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். நேற்று நடிகை திவ்யா தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நிலையில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் தனது கணவன் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாகவும், தங்களது திருமணம் தொடர்பான புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை வெளியிட்டதால் அவர் தன்னை தாக்கியதாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலையின் இருப்பதாக கூறினார். மேலும் தன்னை அர்னவ்  அடித்ததால் தனது கரு கலையும் நிலைமையில் உள்ளது என்று கூறினார்.

Advertisement

மற்றொரு வீடியோவில் நாங்கள் இருவரும் ஒன்றாய் இருந்த காலத்தில் நாங்கள் வாங்கிய பர்சனல் லோன் இஎம்ஐ கூட நான் கட்டினேன். அவருக்கு சீரியல் எதுவும் இல்லாதபோது கூட நான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன். ஆனால் அவர் அதை எதையும் நினைத்து பார்க்காமல் என்னை சித்திரவதை செய்கிறார். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவர் வேண்டும் எனக்கு என்று மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in