வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?…. மேடையில் உண்மையை கூறிய நடிகர் ஷ்யாம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?…. மேடையில் உண்மையை கூறிய நடிகர் ஷ்யாம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷ்யாம், பிரகாஷ் ராஜா அவர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் வாரிசு படத்தின் பட்ஜெட் 60 கோடி என கூறப்பட்டது. ஆனால் படத்தின் முடிவில் 80 கோடி ஆகிவிட்டது. இருந்தாலும் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் படம் நன்றாக வரவேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in