CRIME
“அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…” மறுத்த குடும்பத்தினர்.. ஆத்திரத்தில் காதலன் கண் முன்னேயே காதலி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
காதலித்த வாலிபரைத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால், ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் கண் முன்னேயே கால்வாயில் குதித்து அடித்துச் செல்லப்பட்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் ஒரு வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, சம்மதிக்க மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த அந்த இளம்பெண், தனது காதலன் அங்கேயே நின்று கொண்டிருந்த போதே, திடீரென அருகில் இருந்த நீர்நிலைக் கால்வாயில் குதித்துள்ளார். கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர் கண் இமைக்கும் நேரத்திற்குள் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
