LATEST NEWS
பிரபல பாடலாசிரியர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
மலையாளத் திரை உலகின் பிரபல பாடலாசிரியரான பீயார் பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் பிரியதர்ஷினி கிளி சுந்தர் மாம்பழம் என்ற திரைப்படத்தில் வித்தியாசாகர் இசையில் ஆறு பாடல்கள், திலீப் மற்றும் மோகன்லால் படங்களில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தமிழில் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலையும் இவர் எழுதியுள்ளார். இந்நிலையில் திடீர் உடல்நல குறைவு காரணமாக இவர் தன்னுடைய 62 வயதில் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
