LATEST NEWS
“ராவணனின் கவுண்டர் அட்டாக்..!” தீயிட்டு கொளுத்தியதும் பொதுமக்களை நோக்கிப் பாய்ந்த பட்டாசுகள்… பதறி அடித்து ஓடிய மக்கள்.. வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!!
தசரா திருவிழாவின் போது ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் ராவண தஹன் (எரிப்பு) கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அப்போது எரிக்கப்பட்ட ராவண உருவபொம்மையிலிருந்து பட்டாசுகள் மற்றும் தீப்பொறிகள் கூட்டத்தை நோக்கி வெடித்துச் சிதறின. இதனால் அங்கு கூடிிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்து ஓடியுள்ளனர். மத ரீதியான இந்தக் கொண்டாட்டம் திடீரென ஒரு பதற்றமான மற்றும் குழப்பமான சூழ்நிலையாக மாறியதுடன், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
வைரலாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு நபர் ராவண உருவபொம்மைக் கீழ் பகுதியில் தீ மூட்டுவது பதிவாகியுள்ளது. தீ பரவத் தொடங்கியதும், அந்த உருவபொம்மையில் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்கத் தொடங்கி, நெருப்புப் பொறிகளையும் ராக்கெட்டுகளையும் சுற்றியிருந்த மக்களின் மீது பாய்ச்சின. இந்தத் திடீர் வெடிகளால் உஷாரடையாத பார்வையாளர்கள், பறந்து வந்த பட்டாசுகளில் இருந்து தப்பிக்க பல்வேறு திசைகளில் ஓட ஆரம்பித்தனர். தீயினால் எரியும் உருவபொம்மை தொடர்ந்து ஒளிர, தீமை மீது நன்மை வெற்றி பெற்றதைக் குறிக்கும் இந்தச் சடங்கு சில விநாடிகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ கிளிப், இன்ஸ்டாகிராம் பயனரான @urr..ammu..07 என்பவரால் பகிரப்பட்டு சுமார் 1.5 கோடி பார்வைகளையும் 9,000-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. சில பயனர்கள் ராவணனின் இந்த எதிர் தாக்குதலைக் கண்டு நகைச்சுவையாக கருத்து தெரிவித்தாலும், சிலர் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். மேலும், பார்வையாளர்கள் உருவபொம்மைக்கு மிக அருகில் நிற்பது ஆபத்தானது என்றும், இது பாலிவுட் திரைப்படமான ‘கோல்மால் 3’ படத்தில் வரும் குழப்பமான காட்சியினைப் போலவே இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
