CRIME
“ஐயோ கடவுளே.. 9 நாட்கள் மார்பில் பானை சுமந்து துர்கா பூஜை விரதம்..” மறுநாளே 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. டாக்டர் சொன்ன அதிர்ச்சி உண்மை..!!
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம் திரிவேணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சச்சிதா தேவி (35) என்ற பெண், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்களாகத் தன் மார்பில் புனித பானையை சுமந்தபடி துர்கா தேவியை தீவிரமாக வழிபட்டு வந்த நிலையில், சடங்குகள் முடிந்த மறுநாளே திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேணிகஞ்ச் சந்தையில் உள்ள துர்கா கோயில் வளாகத்தில் தங்கியிருந்து இந்த கடுமையான ஆன்மீகச் சடங்கை செவ்வாய்க்கிழமை வரை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார். சடங்குகளை முடித்துக்கொண்டு அன்று இரவு அவர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், நள்ளிரவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.
மறுநாள் புதன்கிழமை காலையில் அவருக்குக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை உடனடியாகத் திரிவேணிகஞ்ச் துணைக்கோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் உமேஷ் குமார் மண்டல், அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தார். ஒன்பது நாட்கள் தீவிர விரதமிருந்ததால் ஏற்பட்ட கடுமையான நீர்ச்சத்து குறைபாடு அல்லது திடீர் இதயப் பாதிப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். பக்திப் பரவசத்துடன் சடங்குகளை முடித்துவிட்டுத் திரும்பிய பெண், அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் உள்ளூர் மக்களையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
