நடிகை கல்யாணியின் கணவர், மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை கல்யாணியின் கணவர், மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கல்யாணி. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கியவர். தனது சிறுவயது முதலே திரைப்பயணத்தை தொடங்கி விட்டார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 300 விளம்பரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அசத்தினார்.

மறுபக்கம் சின்னத்திரையிலும் 8 சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு பிசியாக இருந்து வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கல்யாணியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in