போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்…. இனி தான் கலவரமே ஆரம்பம்…. வெளியானது இன்றைய ப்ரோமோ…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்…. இனி தான் கலவரமே ஆரம்பம்…. வெளியானது இன்றைய ப்ரோமோ…!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை வாக்குகளின் அடிப்படையில் மணிகண்டன் மிக குறைவான வாக்குகளை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இன்று புதிய டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது சொர்க்கம் மற்றும் நரகம் என்று போட்டியாளர்கள் இரண்டு டீமாக பிரிந்து விளையாடும் நிலையில் நகரத்தில் அதிக நேரம் பெடலிங் செய்தவர் சொர்க்கத்திற்கும் சொர்க்கவாசிகள் கலந்து பேசி அவர்களின் ஒருவரை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சண்டை சூடு பிடிக்கப் போவது என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in