தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர்.

இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் திகழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டு 20 வது வயதில் மிஸ்டர் மெட்ராஸ் என்ற போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றவர் சரத்குமார்.

அன்று முதல் இன்று வரை உடல் நலம் குறித்து உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவரின் நடிப்புக்காக பல விருதுகளையும் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் சுமார் 150 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோரும் சினிமாவில் இருக்கின்றனர்.

கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட சரத்குமார் முதலில் ஒரு fiat கார் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு பல சொகுசு கார்களையும் அவர் வாங்கியுள்ளார். இவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு பெரிய வீடு உள்ளது.அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் வீடு குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.