LATEST NEWS
கொடூரம்..! “சுதந்திர தின விருந்துக்காக 23 யானைகள் கொலை” போட்ஸ்வானா அரசின் கொடூர முடிவுக்கு உலகளவில் குவியும் கண்டனம்…!!
தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா, தனது 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விருந்தளிப்பதற்காக 23 யானைகளைக் கொல்ல அனுமதி அளித்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்காக, நாட்டின் எட்டு மாகாணங்களில் யானைகளுடன் சேர்த்து சில கலைமான்களையும் வேட்டையாட அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த வினோதமான விருந்துக்காகப் பல்வேறு மாகாணங்களில் சிறப்பு வேட்டை உரிமங்களை அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காடுகளின் சூழலியல் சக்கரம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் முதன்மை உயிரினமான யானைகளை இவ்வாறு கொன்று குவிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுச்சூழல் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு உலகெங்கிலும் உள்ள விலங்கு நல அமைப்புகள் மற்றும் சூழலியலாளர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய கொண்டாட்டங்கள் காட்டுயிர்களின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதால், சர்வதேச அளவில் போட்ஸ்வானா அரசின் இந்த முடிவிற்கு எதிராகப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
