TRENDING
ஹைதெராபாத் மருத்துவர் வாயில் மதுவை ஊற்றி வன்புணர்வு செய்த 4 இளைஞர்கள்!…..பரபரப்பு வாக்குமூலம் ?..

இந்தியாவில் பெண்பிள்ளைகள் பிறப்பதும் குறைவு, அப்படி மீறி பிறந்தாலும் அவர்களை வளர விடாமல் வன்புணர்வு செய்து அழித்து விடுகிறார்கள். பெண்களுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்குமோ ?… ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, பின் மோசமாக மகொடுமைபடுத்தப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து அந்த பெண்ணின் உடலை பெங்களூர் – ஹைதராபாத் ஹைவே கொண்டு சென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கொலை குறித்து அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. போலீசால் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் வாக்குமூலங்களை அளித்துள்ளனர். அதன்படி அந்த பெண் பைக்கை டோல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்தில் அவரின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். பின் அந்த பெண் வர வேண்டும் என்று காத்து இருந்துள்ளனர்.
அதன்பின் அந்த பெண் இரவு 9.25 மணிக்கு அங்கு வந்த பின், உதவி செய்வது போல முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் பைக்கை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மற்ற மூன்று ஆண்களும் அந்த பெண்ணை தாக்கிவிட்டு, அருகில் இருந்த புதருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலில் அந்த பெண்ணின் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.27கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை .
பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து கொன்றுள்ளனர்இந்த உடலை 24 மணி நேரம் கழித்துதான் போலீசார் கண்டுபிடித்தனர். நள்ளிரவில் கொலை நடந்ததால், அங்கு யாரும் தங்களை பார்க்கவில்லை என்று 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.