LATEST NEWS
கணவர் இருக்கும் போதே இப்படியா?…. டிடி நிகழ்ச்சியில் நயன்தாராவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….. அப்படி என்ன நடந்தது….????
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே திருமணத்திற்குப் பிறகு படப்பிடிப்பில் தாலியை கழட்ட முடியாது என்று படத்தின் இயக்குனர்களிடம் கூறிய நயன்தாரா, அதை மறைக்கும்படியான ஆடை அணிந்து தான் சமீபத்தில் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடிக்கு பேட்டியளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் தன்னுடைய தாலியை கழட்டி விட்டு வெளியில் வந்துள்ளார். இதனைப் பார்த்த பலரும் நயன்தாராவை விமர்சித்து வருகின்றனர்.
