இந்த குல்லாவுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?…SK 21 திரைப்படத்துக்காக குல்லா உடன் அலையும் சிவகார்த்திகேயன்… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

இந்த குல்லாவுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?…SK 21 திரைப்படத்துக்காக குல்லா உடன் அலையும் சிவகார்த்திகேயன்… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி  பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை. தற்பொழுது சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்துடைய 75 நாட்கள் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின

இந்தப் படத்தில் சிவா கமிட்டானவுடனே தலையில் குல்லாவுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தார். மாமன்னன், மாவீரன் விழாவுக்குக்கூட இந்த குல்லாவுடன் தான் வந்தார். அது ஏன் என்று எல்லோரும் கேட்க எஸ்கே 21 ஹேர் ஸ்டைல் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான் என கூறப்பட்டது. நேற்று வெளியிட்ட எஸ்கே 21 படக்குழு புகைப்படத்தில் சிவகார்த்திகேயேன் பக்கா மிலிட்டரி கட்டிங்கோடு காட்சியளிக்கிறார். தற்பொழுது இதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த மிலிட்டரி கட்டிங் ஹேர் ஸ்டைலுக்காகவா இப்படி?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.