நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா?… வாழ்த்து தெரிவித்து அவரே வெளியிட்ட புகைப்படம்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா?… வாழ்த்து தெரிவித்து அவரே வெளியிட்ட புகைப்படம்…

Published

on

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகரும்  இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள். இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கொண்ட படமாக தான் இருக்கும். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

2003 ஆம் ஆண்டு ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதை ஆசிரியராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே ‘தமிழக அரசின் சிறந்த கதை ஆசிரியருக்கான விருதை’ பெற்றார். தற்பொழுது 46 வயதாகும் சமுத்திரக்கனி இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.

Advertisement

இதை தொடர்ந்து இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என 10 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். மக்களுக்குத் தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை தரமான படங்கள் தெரிவித்துக் கொண்டு வருகிறார். இயக்கத்தையும் தாண்டி பல்வேறு படங்களில் வில்லன், ஹீரோ என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இவர் தற்பொழுது தன்னுடைய மகள் ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் நிற்பது போன்று கையில் பரிசுகளோடு இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு “வாழ்த்துக்கள் மகளே நீ இன்னும் வெல்வாய்” என்று அந்த புகைப்படத்திற்கு சமுத்திரக்கனி கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Advertisement

Continue Reading
Advertisement