LATEST NEWS
‘சார்! நீங்க இவ்ளோ ஜாலி டைப்பா?’… மனைவி, மகளுடன் சுற்றுலா சென்ற ஏ ஆர் ரஹ்மான்… பலரும் பார்த்திடாத unseen வீடியோ…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கிய முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார். தற்பொழுது இவர் பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கதீஜா ரகுமான் தந்தையைப் போல் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெறும் புதிய மனிதா பாடலை பாடினார். அதோடு மட்டுமின்றி பல ஹிட் ஆல்பம் பாடல்களையும் தற்பொழுது பாடி வருகிறார்.
தற்பொழுது ஏ ஆர் ரஹ்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் விடுமுறையை கொண்ட சுற்றுலா சென்ற வீடியோ ஒன்று திடீரென்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘சார்! நீங்க இவ்ளோ ஜாலி டைப்பா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…