LATEST NEWS
‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் சூர்யா அம்மாவா இது?… கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம்… ஷாக்கில் ரசிகர்கள்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தில் குடும்பம், காதல், நண்பர்கள், லட்சியம் என சில எமோஷன்களுடன் அமைந்திருப்பதால் மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்காவும், சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் சுவாமிநாதன் ஜோடியாக நடித்து வருகின்றனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த சீரியலில் சூர்யா வெற்றிகரமாக வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் மீனாட்சி அவர்கள் சொத்துக்களை ஏமாற்றி மாற்றி எழுதிக் கொண்டார்.
கல்லூரியிலும் சூர்யா, வெண்ணிலா நுழைய சதி செய்துவிட்டார் மீனாட்சி, அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த தொடரில் நாயகன் சூர்யாவின் அம்மாவாக சில மாதங்களுக்கு முன் ஜோதி ராய் என்ற நடிகை தான் நடித்து வந்தார், ஆனால் சில காரணங்களால் அவர் மாற்றப்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் சேலை அணிந்து அடக்கமாக அம்மா வேடத்தில் நடித்தவர் நடிகை ஜோதி ராய். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஜோதி ராய். இவர் தற்போது இன்ஸ்டாவில் படு கிளாமர் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.
