LATEST NEWS
Super man சென்னையில் தொலைந்து விட்டாரா?… வழி சொல்லி அனுப்பி வைத்த ஜாக்குலின்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ஜாக்குலின்.கடைசியில் விஜய் டிவியில் சேர்ந்தார் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார்.
மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார். தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஜாக்குலின்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஜாக்குலின். இவர் தற்பொழுது சென்னையில் தொலைந்து போன Super man-க்கு வழி சொன்னதாக வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram