LATEST NEWS
‘pokemon theme-ல் பிறந்தநாள் கொண்டாட்டம்’… மகனின் 6-வது பிறந்தநாளை குழந்தைகளோடு கொண்டாடிய பிக் பாஸ் மணிகண்டன்… வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிந்த ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 6. இந்த சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் மணிகண்டன். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் பிக் பாஸ் வீட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி மிகவும் சிறப்பாக விளையாடினார்.
இருப்பினும் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இது மட்டுமின்றி சின்னத்திரையிலும் சீரியல் நடிகராக வலம் வந்தார். நடிகர் மணிகண்டன் சோபியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மணிகண்ட ராஜேஷ். இவர் தற்பொழுது தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram