நண்பர்களுடன் ஜாலியாக தாய்லாந்து ட்ரிப் சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நண்பர்களுடன் ஜாலியாக தாய்லாந்து ட்ரிப் சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

அதனை தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களிலும் நடித்தார்.

அடுத்ததாக அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் பாசமான தங்கையாக நடித்த இவர் செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படத்திலும் நடித்துஅசத்தினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தசரா திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போதைய திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

காதல், காமெடி மற்றும் கிராமத்து பெண் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தென்னிந்திய சினிமா அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in