விஜய் டிவி famous ஆனதே இந்த நிகழ்ச்சியால் தான்.. நடிகர் சுவாமிநாதன் ஓபன் டாக்.. வைரல் வீடியோ. !! - cinefeeds
Connect with us

VIDEOS

விஜய் டிவி famous ஆனதே இந்த நிகழ்ச்சியால் தான்.. நடிகர் சுவாமிநாதன் ஓபன் டாக்.. வைரல் வீடியோ. !!

Published

on

தமிழ் சினிமாவில் 42 வருடங்களுக்கு மேலாக நடிகராக பயணித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சாமிநாதன். கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். சென்னையில் திரைப்பட கல்லூரியில் படித்த இவருக்கு நடிகர் நாசர் ஜூனியராம். திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு பல நிறுவனங்களில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் காமெடியனாக நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் ஹீரோ வாய்ப்பை இவர் நிராகரித்து விட்டார்.

அப்போது தொடங்கி தற்போது வரை தனது காமெடி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சந்தானத்துடன் இவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் தற்போது வரை 650 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பிறகு தான் வெள்ளி திரையில் நுழைந்தார்.

Advertisement

ஆரம்பத்தில் ஆனந்தம் மற்றும் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்து தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் டிவி பிரபலமானதற்கு லொள்ளு சபா நிகழ்ச்சி தான் காரணம் என கூறிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Golden Sands இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@golden_sandstv)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in