VIDEOS
இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா?… பிரபல நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்ட சீரியல் நடிகை கிருத்திகா லட்டுவின் லேட்டஸ்ட் வீடியோ..!!

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிருத்திகா லட்டு. இவர் முதல் முதலில் தேன்நிலவு என்ற சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன. அதன்படி பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து இவர் கலந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் சீரியலில் நடிப்பதை தாண்டி சென்னை 600028, சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் கிருத்திகா லட்டும் கடந்த சில நாட்களாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கிருத்திகா லட்டு தனது மகளுடன் சமீபத்தில் கிளாசிக் கிச்சன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க