LATEST NEWS
பாஜக-வில் இணையும் தனுஷ்..? நற்பணி இயக்க மகளிர் கூட்டத்தில் வழங்கப்பட்டவெள்ளி விளக்கில் இருந்த அந்த குறியீடு… அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவும் பரபரப்பு..!!
நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் மகளிருக்கு வழங்கப்பட்ட வெள்ளி விளக்குகளின் பின்புறம் தாமரை முத்திரை பதிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பின்போது, கலந்து கொண்ட சுமார் 3,000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன.
இவ்வாறு பரிசாக வழங்கப்பட்ட அந்த விளக்குகளின் பின்புறத்தில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சின்னமான தாமரை போன்ற முத்திரை பதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அண்மைக் காலமாக தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தாமரை முத்திரை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அரசியல் மேடைகளில் தனுஷ் குறித்துப் பேசப்பட்டு வரும் வேளையில், இந்த முத்திரை தற்செயலாக இடம்பெற்றதா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் சிக்னல் உள்ளதா என்ற கோணத்தில் நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். தனுஷ் வழங்கிய வெள்ளி விளக்கில் இருக்கும் தாமரை முத்திரை குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
