நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை…..! ஒரே பதிவில்….. திணறும் சோசியல் மீடியா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை…..! ஒரே பதிவில்….. திணறும் சோசியல் மீடியா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

Advertisement

இவர்கள் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கோவில், தாய் வீடு மற்றும் ஹனிமூன் என்று பல நாடுகளுக்கு சுற்றித்திரிந்த இந்த ஜோடிகள் அங்கு எடுக்கப்படும் ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பகுதியில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “நானும் நயன்தாராவும் அம்மா அப்பா ஆகிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பிரார்த்தனைகள் முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் நல்ல செயல்கள் எல்லாம் சேர்த்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளை கொடுத்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்காக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in