பாஜகவுடன் ரகசிய டீல்..? அதிமுகவை உடைக்கும் தவெகவுக்கு ஆளுநரும் தேர்தல் ஆணையமும் உதவுகிறது..? பனையூர் பாபு கிளப்பிய அரசியல் பூகம்பம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாஜகவுடன் ரகசிய டீல்..? அதிமுகவை உடைக்கும் தவெகவுக்கு ஆளுநரும் தேர்தல் ஆணையமும் உதவுகிறது..? பனையூர் பாபு கிளப்பிய அரசியல் பூகம்பம்..!

Published

on

பாஜகவுக்குக் கைமாறு செய்யும் விதமாக தவெக செயல்பட்டு வருவதாகவும், சுயலாபத்துக்காக மாநில உரிமைகளை அது அடகு வைப்பதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு கடுமையாக விமரிசித்துள்ளார். தவெகவின் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது என்று அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்காகப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பிரசாரம் செய்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாஜகவின் ஒப்புதல் இல்லாமல் தவெகவினால் அதிமுகவை உடைக்க முடியாது என்று சாடியுள்ளார். தவெக குதிரைபேரத்தில் ஈடுபடும்போது ஆளுநர் வேடிக்கை பார்ப்பதாகவும், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்குத் தாவுவதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தவெக பாஜகவுடன் மிகப் பெரிய டீல் போட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். அதற்கு கைமாறு செய்யும் விதமாகவே விபி ஜி ராம் ஜி திட்டத்தை அமல்படுத்துவது, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பாஜக சொல்லும் நபரைத் தேர்வு செய்வது மற்றும் சட்டமன்றத்தில் ஆளுநரைக் குளிர்விப்பது போன்ற வேலைகளில் தவெக அரசு ஈடுபடுவதாக பனையூர் பாபு பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in